1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2023 (19:06 IST)

அவர் அடுத்த விராட் கோலி ஆக வேண்டுமென நினைக்கிறார்- சுரேஷ் ரெய்னா

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரை காண உலக கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

உலகக் கோப்பை தொடரில் விளையாட இந்திய அணியினர் தயாராகி வருகின்றனர்.

இந்த உலகக் கோப்பை போட்டி தொடரை பிரபலப்படுத்தும் விதமாக 'தில் ஜாஷ்ன் போலே'  என்ற பாடலை  ஐசிசி வெளியிட்ட நிலையில் அது வைரலானது.

இந்த நிலையில்,. ‘’இந்த உலகக் கோப்பை தொடரில் சுப்மன் கில் முக்கிய வீரராக இருப்பார் ‘’என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’அவர் அடுத்த விராட் கோலி ஆக வேண்டும் என்று நினைக்கிறார். அந்த பண்புகளை அவர் ஏற்கனவே அடைந்துவிட்டார்.  உலகக் கோப்பை போட்டிக்கு பின் அவரைப் பற்றி நாம் அடிக்கடி பேச வேண்டிய நிலைவரும் ‘’என்று தெரிவித்துள்ளார்.