திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2023 (20:16 IST)

நெதர்லாந்து அணிக்கு பயிற்சியாளரான தமிழர்

Netherlands
இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சர்வதேச கிரிக்கெட் அணிகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில்,   நெதர்லாந்து அணிக்கு தமிழக வீரர் ஒருவர்  வலை பயிற்சி பந்து வீச்சாளராக தேர்வாகியுள்ளார்.

இவர், சென்னையைச் சேர்ந்த  லோகேஷ் குமார் (29)ஆவார். கடந்த 2018 ஆம் ஆண்டு உணவு வி நியோகிப்பாளராக வேலை பார்த்து வந்த அவர் கிரிக்கெட் வீரராக அறியப்படுகிறார்.

நெதர்லாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு தன் வேகப்பந்து வீச்சு வீடியோவை அனுப்பியுள்ளார் லோகேஷ். அதபிறகு 4 பேரில் ஒருவராக அவரை தேர்வு செய்து வலைப்பந்து வீச்சாளராக தேர்வு செய்துள்ளது.