காயத்தில் இருந்து குணமாகிவிட்டேன்.. போட்டிக்கு தயார்.. ஸ்டீவ் ஸ்மித் அறிவிப்பு..!
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் கடந்த சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த நிலையில் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து விளையாட தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது என்பதும் இந்த போட்டி நாளை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்து மன உறுதி மற்றும் உடல் உறுதியுடன் இருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். நாளை நடைபெற இருக்குமா போட்டியில் அவர் கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Mahendran