1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Third odi between india and Pakistan today at Rajkot

இன்று நடக்கிறது மூன்றாவது ஒருநாள் போட்டி… ஆஸியை வொயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

இந்தியா
உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே மொஹாலியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியை இந்திய அணி வென்றுள்ள நிலையில் நேற்று இந்தூரில் நடந்த இரண்டாவது போட்டியையும் 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து ராஜ்கோட் சௌராஷ்டிரா மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு மூன்றாவது ஒருநாள் போட்டி நடக்க உள்ளது. ஓய்வில் இருந்த ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட வீரர்கள் அணிக்குள் இணைந்துள்ள நிலையில், இதனால் ஷுப்மன் கில் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த போட்டியை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் ஆஸி அணியை வொயிட்வாஷ் செய்யும். அதே நேரத்தில் ஆறுதல் வெற்றி பெற, இந்த போட்டியில் ஆஸி அணி கடுமையாக போராடும் எனவும் எதிர்பார்க்கலாம். உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
உலகக்கோப்பை முடியும் போது அதிக ரன்கள் சேர்த்தவராக இவர்தான் இருப்பார்… டிவில்லியர்ஸ் கணிப்பு!