1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 27 செப்டம்பர் 2023 (07:59 IST)

உலகக்கோப்பை முடியும் போது அதிக ரன்கள் சேர்த்தவராக இவர்தான் இருப்பார்… டிவில்லியர்ஸ் கணிப்பு!

இந்திய அணியில் மிகச்சிறந்த இளம் வீரர்களில் ஒருவராக உருவாகி வருகிறார் ஷுப்மன் கில். ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் என அனைத்து வகையான போட்டிகளிலும் கலக்கும் கில், இந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் 6 சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின், கோலி, ரோஹித், தவான், கங்குலி மற்றும் டிராவிட் ஆகிய வீரர்கள் மட்டுமே ஒரு ஆண்டில் 5 சதங்களுக்கு மேல் சேர்த்துள்ளனர். முதல் 35 இன்னிங்ஸ்களில் மட்டும் அவர் 1900 ரன்களுக்கு மேல் சேர்த்து சாதனைப் படைத்துள்ளார்.

ஆசியக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய, அவர் இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் கலக்கி வருகிறார். இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் வேகமாக முன்னேறி வருகிறார்.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடர் பற்றி பேசியுள்ள முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் “இந்த உலகக் கோப்பை தொடர் முடியும் போது ஷுப்மன் கில்தான் அதிக ரன்கள் சேர்த்தவராக இருப்பார்” எனக் கூறியுள்ளார்.