1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (15:37 IST)

ஆசிய போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம்.. 40 ஆண்டுகளுக்கு பின் குதிரையேற்றத்தில் தங்கம்..!

ஆசிய போட்டியில்  இந்தியாவுக்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது என்பதும், அதிலும் 40 ஆண்டுகளுக்கு பின் குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கடந்த சில நாட்களாக ஆசிய போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று குதிரையேற்ற போட்டியில் 209 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்தது. இந்திய அணியின் அனுஷ் அகர்வாலா, ஹிரிதய் விபுல் சேதா, திவ்யக்ரித்தி சிங் ஆகியோர் அடங்கிய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. 
 
இந்த நிலையில்  ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்க பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்களம் என மொத்தம் 11 பதக்கஙக்ள் வென்றுள்ளது.
 
Edited by Siva