வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (13:06 IST)

ரத்தத்தைக் கொடுத்து கட்சியை வளர்த்திருக்கிறார்கள்-அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ் நாடு முழ்க்க என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை பயணம் மேற்கொண்டு வரும் ராமேஸ்வரத்தில் தொடங்கி தற்போது கோவையில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், அண்ணாமலை தன் சமூகவலைதள பக்கத்தில்,3

‘‘என் மண் என் மக்கள்’ பயணம், கோவையில், கோவை வடக்கு மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிகளில் மக்கள் ஆரவாரத்துடன் சிறப்புடன் நடந்தேறியது. தமிழகத்தின் பிற பகுதிகளில் வேர்வையைக் கொடுத்து கட்சியை வளர்த்திருக்கிறார்கள் என்றால், கோவையில், ரத்தத்தைக் கொடுத்து கட்சியை வளர்த்திருக்கிறார்கள்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  நரேந்திரமோடி அவர்கள் ஆட்சியில்தான், ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு வேலை செய்கிறது. வீடு இல்லாதவர்களுக்கு, கழிப்பறை வசதி இல்லாதவர்களுக்கு, வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு என அனைத்து எளிய மக்களின் தேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன., மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியம், எந்த இடைத்தரகர் கமிஷனும் இல்லாமல், நேரடியாக மக்களுக்குக் கிடைக்கிறது. சுத்தமான, ஊழலற்ற அரசியல் நடக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் வேலை செய்கிறோம். தமிழகத்தில், தமிழக அரசு மற்றும், அதிகாரிகள் செய்யவேண்டிய வேலையை பாஜக செய்கிறது. ஏழை எளிய மக்களிடம், மத்திய அரசின் நலத்திட்டங்களைக் கொண்டு சென்று, அவர்களைப் பயன்பெறச் செய்கிறது.

குடும்ப அரசியலுக்கு எதிராக யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார் நமது பிரதமர் மோடி அவர்கள். வளர்ச்சியின் பாதையில் நாடு செல்கிறது. 2014 ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் 11 ஆவது இடம் இருந்த நமது நாடு, தற்போது 5 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களது நல்லாட்சியில், அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 ஆவது இடத்தைப் பிடிக்கும். 2047 ஆம் ஆண்டு, உலகின் முதல் இடத்தில் பாரதம் இருக்க வேண்டும் என்பது நமது பிரதமரின் கனவு. அதனை நோக்கி உழைத்துக் கொண்டிருக்கிறார். நமது வாழ்நாளில், பாரதம், பொருளாதாரத்தில் உலகின் முதல் நாடு என்ற நிலையை அடைவதைப் பார்க்க முடியும். நாடு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால், நேர்மையான ஊழல் இல்லாத அரசால்தான் முடியும். நேர்மையான அரசியல் நடத்த முடியும் என்பதை நமது பிரதமர் நிரூபித்திருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.