T-20 கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்
ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையேயான 2 வது டி-20 போட்டியில் இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் வெற்றி பெற்றது..
இதையடுத்து, இன்று இரண்டாவது டி-20 போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியில் முததலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.
எனவே ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில், 4 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
படேல் 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.