செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (18:52 IST)

ஜூலியஸ் பேர் செஸ் போட்டி: பிரக்ஞானந்தா அதிர்ச்சித் தோல்வி

pragnanandha
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா பல போட்டிகளில் வென்று உள்ள நிலையில் இன்று நடைபெற்ற ஜூலியஸ் பேர்  கோப்பை செஸ் போட்டியின் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்
 
ஜூலியஸ் பெயர் கோப்பை செஸ் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பிரக்ஞானந்தா உள்பட 16 வீரர்கள் பங்கேற்றுள்ளனர் 
 
செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இன்று தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா காலிறுதி ஆட்டத்தில் வின்செண்ட் கீமர் என்பவர் உடன் மோதினார்
 
இந்த போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்