1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (18:04 IST)

2023 ஐபிஎல் போட்டி குறித்து கங்குலி முக்கிய அறிவிப்பு!

Ganguly
2023ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் குறித்த முக்கிய தகவல்களை பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவில் உள்ள ஒரு சில மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்து உள்ளதை அடுத்து மீண்டும் பழைய நடைமுறைப்படி ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடக்கும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
ஒவ்வொரு அணியும் அந்த அணியின் சொந்த மைதானத்தில் ஒரு போட்டியும் மீதமுள்ள அணியின் மைதானத்தில் மற்ற போட்டிகளும் பழைய முறைப்படி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஐபிஎல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்