1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (13:31 IST)

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் தேதி!

women asia cup
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் இலங்கை சாம்பியன் பட்டம் வென்றது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் தற்போது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் அட்டவணை வெளியாகியுள்ளது. இதன்படி இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கை அணியுடன் மோதுகிறது என்பதும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிகள் விளையாடும் போட்டிகளின் விபரங்கள்:
 
அக்டோபர் 1-ம் தேதி:  இந்தியா - இலங்கை 
 
அக்டோபர் 3-ம் தேதி:  இந்தியா - மலேசியா
 
அக்டோபர் 4-ம் தேதி:  இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம்
 
அக்டோபர் 7-ம் தேதி:  இந்தியா - பாகிஸ்தான்
 
அக்டோபர் 8-ம் தேதி:  இந்தியா - வங்காளதேசம்
 
அக்டோபர் 10-ம் தேதி: இந்தியா - தாய்லாந்து.