தொடர்புடைய செய்திகள்
- இலங்கைக்கு எதிரான முதல் டி 20 ஆட்டம்… இந்திய அணியில் ஆடப்போகும் ப்ளேயிங் 11 என்ன?
- தயாரிப்பாளர்கள் என்னை ஏமாற்றிவிட்டனர்… அக்ஷய் குமார் புலம்பல்!
- இந்தியா இரண்டாக பிரிந்து போகும்: யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ்..!
- மகளிர் ஆசிய கோப்பை: 80 ரன்களில் சுருண்ட வங்கதேசம்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!
- இந்தியா எதற்காக பாகிஸ்தான் செல்லவேண்டும்… நம் வீரர்களின் பாதுகாப்புதான் முக்கியம்- ஹர்பஜன் சிங் கருத்து!
வீரர்களை திட்டியதால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்… இது எப்ப?
உலகக் கோப்பையை வென்ற கையோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் இனிமேல் டி 20 அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாதான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது டி 20 அணிக்குக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மும்பை அணிக்குக் கேப்டனாக விஜய் ஹசாரே தொடரை வழிநடத்தினார் சூர்யா. அப்போது மும்பை அணி படுமோசமான தோல்விகளை சந்தித்தது. கேபட்னாக சூர்யா ஒழுங்காக நடக்கவில்லை என வீரர்களும் அணி மேலாளரும் அவர் மேல் குற்றம்சாட்டினர். அதனால் அவரின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர் “அந்த சூர்யகுமார் வேறு, இப்போது இருப்பவர் வேறு” எனப் பதிலளித்துள்ளார்.