1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. First t 20 between india and srilanka today

இலங்கைக்கு எதிரான முதல் டி 20 ஆட்டம்… இந்திய அணியில் ஆடப்போகும் ப்ளேயிங் 11 என்ன?

இந்தியா
உலகக் கோப்பையை வென்ற கையோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் இனிமேல் டி 20 அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாதான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது டி 20 அணிக்குக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்வை கேப்டனாக இந்திய அணி நிர்வாகம் நியமித்துள்ளது.

இந்நிலையில் சூர்யகுமார் கம்பீர் கூட்டணியில் இந்திய டி 20 அணிக்காக புதிய யுகம் இன்றில் இருந்து தொடங்குகிறது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று முதல் டி 20 போட்டியில் விளையாடவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் விளையாடப் போகும் வீரர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோலி, ரோஹித் மற்றும் ஜடேஜா ஆகிய மூவரின் இடத்தை நிரப்பப் போகும் வீரர்கள் யார் என்பதைக் காணவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இன்றைய போட்டி பல்லேகலே மைதானத்தில் இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
டெஸ்ட் போட்டிகளிலும் துணைக் கேப்டன் பொறுப்பு… ஷுப்மன் கில்தான் எதிர்கால கேப்டனா?