வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 20 மார்ச் 2023 (15:25 IST)

ஹர்திக் பாண்ட்யா & சூர்யகுமாரின் இடங்களை மாற்ற வேண்டும்.. தினேஷ் கார்த்திக் சொல்லும் ஐடியா!

நேற்றைய ஆஸி அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வரலாறு காணாத அளவுக்கு சொதப்பினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆனார். அதே போல அடுத்த கேப்டன் என எதிர்பார்க்கப்படும் ஹர்திக் பாண்ட்யாவும் சொதப்பி வருகிறார்.

இதுபற்றி பேசியுள்ள தினேஷ் கார்த்திக் இருவரின் இடத்தையும் மாற்றி விளையாட வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அவரது பேச்சில் “ சூர்யகுமார் டி20யில் கூட அந்த இரண்டு பந்துகளில் அவுட் ஆகி இருப்பார். ஒருநாள் போட்டி என்பதால் மட்டும் அவர் அவுட் ஆகவில்லை. ஸ்டார்க் வீசியது  உயர்தர பந்துவீச்சு.

ஷ்ரேயாஸ் ஐயர் நான்காவது இடத்தில் விளையாட விரும்புகிறார். சூர்யா ஒரு பேக் அப் வீரராக இருக்கிறார். நான் பார்க்க விரும்புவது என்னவெனில், சூர்யாவின் சிறந்த பலனைப் பெற அவர்கள் அவரை வேறு இடத்தில் அவரை இறங்க வைப்பார்களா என்பதுதான்.  ஹர்திக் சிறப்பாக பேட்டிங் செய்வதை ரசிப்பதால் அவரை நம்பர்.4 மற்றும் சூர்யாவை ஆறாவது இடத்தில் அனுப்ப வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், நீங்கள் அவருக்கு 15-18 ஓவர்கள் கொடுக்கும்போது, ​​அவர் ஆட்டத்தை தலைகீழாக மாற்றும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.