வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (09:17 IST)

ஒரே நாளில் பிராண்ட்… இந்தியா முழுவதும் தோனி வெறி- மனம் திறந்த தினேஷ் கார்த்திக்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் விரைவில் ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாக கருத்துகள் எழுந்துள்ளன. கடந்த பல ஆண்டுகளாக அணியில் தனது இடத்துக்காக போராடிவந்த தினேஷ் கார்த்திக் தனது 37 ஆவது வயதில் தற்போது டி 20 அணியில் பினிஷராகக் கலக்கி இடம்பிடித்து வருகிறார். இதையடுத்து தற்போது அணியில் இடம்பிடித்து வரும் அவர் ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்தார். ஆனால் அவர் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு விளையாடவில்லை.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பிடிக்க தனக்கும் தோனிக்கும் இடையே இருந்த போட்டி குறித்து பேசியுள்ளார். அதில் “நாங்கள் இருவரும் இந்தியா ஏ அணிக்காக ஒன்றாக விளையாடினோம். அப்போதுதான் நான் தோனியைப் பார்த்தேன். தோனிக்கு முன்பாகவே எனக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. பின்னர் தோனி அறிமுகமாகி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உலகம் அதுவரை அப்படி ஒரு ஆட்டத்தைப் பார்த்து பழக்கப்பட்டு இருக்கவில்லை. தோனி தோனி என்ற வெறி பரவியது. தொடர்ந்து சிறப்பாக ஆடி அவர் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்தார். வாய்ப்புகள் வரும் போது அதை இறுகப் பற்றிக் கொள்வதில்தான் போட்டி உள்ளது” எனக் கூறியுள்ளார்.