வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 15 மார்ச் 2023 (08:05 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் இவர்தான்; கவாஸ்கர் கணிப்பு..!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தற்போது ரோகித் சர்மா இருந்து வரும் நிலையில் அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் என கவாஸ்கர் கணித்துள்ளார் 
 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா கலந்து கொள்ளவில்லை என்றும் குடும்ப நிகழ்ச்சி காரணமாக அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
அதற்கு பதிலாக இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா வழி நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டனாக கேப்டனாக ஹர்திக் பாண்டியா மாறிவிடுவார் என்றும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர் என்றும் மிடில் ஆடர் வரிசையில் அவரது ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய திறமைசாலி என்றும் தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே ஐபிஎல் போட்டியில் கேப்டனாக இருந்த அனுபவம் உள்ள ஹர்திக் பாண்ட்யா கண்டிப்பாக சகவீரர்களை அரவணைத்து இந்திய அணியின் கேப்டனாக மாறுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார் மட்டுமல்ல
 
Edited by Siva