வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 16 பிப்ரவரி 2023 (15:21 IST)

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் வெளியே? -அணியில் நடக்கப் போகும் முக்கிய மாற்றம்!

கடந்த ஒரு வருடமாக சூர்யகுமார் யாதவ் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சகட்ட ஆட்டத்திறனில் இருக்கிறார். இந்த ஆண்டு மட்டும் அவர் டி 20 போட்டிகளில் 1000க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.இப்போது டி 20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியிலும் இடம்பிடித்துள்ளார். ஆனால் டி 20 போட்டிகளில் ஏற்படுத்திய தாக்கத்தை அவரால் மற்ற வடிவங்களில் இன்னும் ஏற்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் காயம் காரணமாக ஆஸி அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விலகிய ஸ்ரேயாஸ் ஐயர் நாளைய போட்டியில் விளையாடுவார் என சொல்லப்படுகிறது. அதனால் சூர்யகுமார் யாதவ்வுக்கு நாளைய போட்டியில் வாய்ப்பு இருக்காது என சொல்லப்படுகிறது.