1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Suresh raina talked about why he did not accept captaincy

“தோனி என்னைக் கேப்டன் ஆகவேண்டாம் என்றார்..” - சுரேஷ் ரெய்னா பகிர்ந்த சீக்ரெட்!

சுரேஷ் ரெய்னா
இந்திய அணிக்காக 10 ஆண்டுகள் மேல் விளையாடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரெய்னா பல வெற்றிகளை இந்தியாவுக்காக பெற்று தந்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய சுரேஷ் ரெய்னா 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

ரெய்னா சர்வதேசக் கிரிக்கெட்டில் பங்களித்ததை விட ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மிகப்பெரிய அளவில் பங்களித்துள்ளார். அதனால் அவரை ரசிகர்கள் மிஸ்டர் ஐபிஎல் என செல்லமாக அழைத்து வருகின்றன.

இந்நிலையில் 2016 -2017 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்ட போது குஜராத் லயன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். அதன் பிறகு அவருக்கு பல அணிகளில் இருந்து கேப்டன்சி வாய்ப்புகள் வந்ததாகவும் ஆனால் அதை தோனியின் வார்த்தைக்காக மறுத்ததாகவும் அவர் ரகசியம் பகிர்ந்துள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர் “ தோனி என்னிடம் நீ எங்கேயும் செல்லவேண்டாம். நான்தான் கேப்டன். நீ என் துணைக் கேப்டன்” எனக் கூறியதாக ரெய்னா கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
இந்திய அணியின் புதிய தலைமைத் தேர்வாளராக அஜித் அகர்கர்