1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Suresh raina will going to play in lanka premiere league

லங்கா பிரீமியர் லீக் போட்டியில் விளையாட உள்ள சின்ன தல ரெய்னா!

சுரேஷ் ரெய்னா
சிஎஸ்கே அணியில் இடம்பெற்றவரை தோனிக்கு அடுத்து ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் சுரேஷ் ரெய்னாதான். அவரை சின்னத்தல என்றே ரசிகர்கள் போற்றி புகழ்ந்துவந்தனர். அவர் ஐபிஎல் தொடரில் இருந்து வெகு சீக்கிரமாக ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது.

ஓய்வு பெற்றாலும் எப்போதும் சென்னை அணியின் செல்லப்பிள்ளையாகவே அவர் இருந்து வருகிறார். கிரிக்கெட் பற்றி தொடர்ந்து டிவீட்கள் பகிர்ந்தும், கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இப்போது ரெய்னா மீண்டும் கிரிக்கெட் பேட்டை கையில் எடுக்கவுள்ளார். லங்கா பிரிமியர் லீக் தொடரில் விளையாட தன்னுடைய பெயரை பதிந்துகொண்டுள்ளார் மிஸ்டர் ஐபிஎல் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சுரேஷ் ரெய்னா.
 
அடுத்த கட்டுரையில்
யாருமே அஷ்வின் அளவு மோசமா நடத்தப்படலை! – சுனில் கவாஸ்கர் ஆதங்கம்!