1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 ஜூன் 2023 (16:23 IST)

இந்திய அணியின் புதிய தலைமைத் தேர்வாளராக அஜித் அகர்கர்

Ajit Agarkar
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைத் தேர்வாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர்  அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் தேர்வுக் குழு தலைவராக இருந்தவர் சேத்தன் சர்மா. இவர் மீதான சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், பிசிசிஐ பிப்ரவரி மாதம் முதல் ஆண்கள் அணிக்கான தேர்வாளர்களின் தலைவரை தேர்வு செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது. இப்பதவிக்கு தற்காலிகமாக தேர்வாளராக ஷிவ் சுந்தர் தாஸ் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், இப்பதவிக்கு நிரந்தர தலைமைத் தேர்வாளரை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஜூன் 30 ஜூலை 1 ஆம்தேதி நேர்காணல் நடத்தப்படும் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தலைமைத் தேர்வாளர் பதவிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.