வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 25 ஜூன் 2023 (07:34 IST)

டி 20 போட்டிகளில் ஜோஸ் பட்லர் படைத்த மைல்கல்… இங்கிலாந்தின் முதல் வீரர்!

டி 20 போட்டிகளின் வரவால் கிரிக்கெட்டின் போக்கே மாறியுள்ளது. இதனால் அதிகளவில் சர்வதேச மற்றும் உள்ளூர் டி 20 போட்டிகள் நடத்தப்படுகின்றன. ரசிகர்களும் டி 20 போட்டிகளையே அதிகமாக பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்தின் உள்ளூர் அணிகளான டெர்பிஷையர் ஃபால்கன்ஸ், லங்காஷையர் அணிகளுக்கு இடையிலான டி20 லீக் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இங்கிலாந்து டி 20 அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் டி 20 போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற மைல்கல் சாதனையைப் படைத்துள்ளார்.

உலகளவில் இந்த சாதனையைப் படைக்கும் 9 ஆவது வீரராக ஜோஸ் பட்லர் உள்ளார். ஜோஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.