1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Sunil gavaskar talked about kohli current form

ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பாகவே கோலி இந்த ரெக்கார்ட படைப்பார்…. சுனில் கவாஸ்கர் கருத்து!

இந்தியா
இந்திய அணியின் மூத்த வீரர் கோலி தன்னுடைய கடைசி நான்கு இன்னிங்ஸ்களில் 3 சதங்களை அடித்து அசத்தியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகளையும் வென்ற இந்திய அணி இலங்கை அணியை வொயிட்வாஷ் செய்தது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 390 ரன்கள் குவித்தது. விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சகமடித்தனர். விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்கள் சேர்த்தார்.

இந்த சதத்தின் மூலம் கோலி ஒரு நாள் போட்டிகளில் 46 சதங்களை அடித்துள்ளார். சச்சினின் சாதனையான 49 சதங்களை அடிக்க அவருக்கு இன்னும் 3 சதங்கள் தேவை.

இதுபற்றி பேசியுள்ள சுனில் கவாஸ்கர் “கோலி மீண்டும் தன்னுடைய பழைய பார்முக்கு வந்துள்ளதாக நினைக்கிறேன். ஐபிஎல் தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு 6 ஒருநாள் போட்டிகள் உள்ளன. அந்த போட்டிகளிலேயே கோலி சச்சினின் சாதனையை சமன் செய்வார் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
என்ன கோலிக்கு தொடர்நாயகன் விருது கொடுத்துட்டாங்க… கம்பீர் பரிந்துரைக்கும் மற்றொரு வீரர்!