1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Kohli broke many records in yesterday match

நேற்றைய போட்டியில் கோலி படைத்த சாதனைத் துளிகள்!

இந்தியா
இந்திய அணியின் மூத்த வீர்ர கோலி நேற்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தினார்.

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகளையும் வென்ற இந்திய அணி இலங்கை அணியை வொயிட்வாஷ் செய்தது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 390 ரன்கள் குவித்தது. விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சகமடித்தனர். விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்கள் சேர்த்தார்.

இந்த போட்டியில் கோலி 8 சிக்ஸர்களை விளாசினார். ஒரு சர்வதேசப் போட்டியில் கோலி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் இதுதான். மேலும் ஒருநாள் போட்டியில் கோலியின் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் இதுதான். மேலும் நேற்றைய போட்டியின் மூலம் அதிவேகமான 150 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையும் கோலி படைத்துள்ளார். 
About Writer
vinoth