கோலி அடித்த பந்தை எடுத்த ரசிகர் செய்த குறும்பு… வைரலான வீடியோ!
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகளையும் வென்ற இந்திய அணி இலங்கை அணியை வொயிட்வாஷ் செய்தது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 390 ரன்கள் குவித்தது. விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சகமடித்தனர். விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்கள் சேர்த்தார்.
நேற்றைய போட்டியில் கோலி சிக்ஸர் மழை பொழிந்தார். அப்படி அவர் ஒரு பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட போது பந்து ரசிகர்கள் இருக்கும் பகுதிக்கு சென்றது. அந்த பந்தை எடுத்த ரசிகர் அதை களத்துக்குள் வீசுவார் என்று நினைத்த நினையில், பந்தோடு ஒரு செல்பி புகைப்படத்தை எடுத்துக்கொண்டு பின்னர்தான் பந்தை வீசினார். இது சம்மந்தமான வீடியோ மைதானத்தில் திரையில் காட்டப்பட்ட போது அனைவரும் ரசித்து பார்த்தனர்.