1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Sunil gavaskar again talked about rohith Sharma should take rest

நான் சொன்னதுதான் நடக்குது… ரோஹித் ஷர்மாவின் ஃபார்ம் குறித்து மீண்டும் பேசிய கவாஸ்கர்!

IPL 2023
நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. 10 அணிகள் மோதிக் கொள்ளும் இந்த ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி இந்த முறையும் கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் மும்பை அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டவர்கள் இந்த சீசனில் சுமாராகவே ஆடி வருகின்றனர்.

இதற்கிடையே விரைவில் நடைபெற உள்ள ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் இறுதி போட்டியிலும் ரோஹித் ஷர்மாவின் ஃபார்ம் அவுட் சிக்கலை ஏற்படுத்தும் என பலரும் கூறி வருகின்றனர். இதுகுறித்து சில தினங்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் “ரோஹித் சர்மா இப்போது ஓய்வு எடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராக வேண்டும். கடைசி சில ஐபிஎல் போட்டிகளை கூட அவர் விளையாடலாம். ஆனால் ஒரு சிறிய ஓய்வு அவருக்கு தேவை” என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து விளையாடிய ரோஹித் சர்மா இரண்டு டக் அவுட்கள் ஆகியுள்ளார்.

இந்நிலையில் இப்போது மீண்டும் பேசியுள்ள கவாஸ்கர் ரோஹித் ஷர்மா ஓய்வெடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டுக்கு புத்துணர்வோடு வருவதுதான் நல்லது என மீண்டும் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ப்ளே ஆஃப் போக சிஎஸ்கே எத்தனை மேட்ச் ஜெயிக்கணும்? – தொடங்கியது கால்குலேசன்!