ஐபிஎல் விளையாடுவது எளிமையானது இல்லை… தோல்விக்குப் பின் புலம்பிய சஞ்சு சாம்சன்!
நேற்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்கள் எடுத்தது. ஜாஸ் பட்லர் அபாரமாக விளையாடி 95 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து 215 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஹைதராபாத் விளையாடிய நிலையில் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. முதல் 5 பந்துகளில் 12 ரன்கள் அடித்த நிலையில் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிலை இருந்தது. ஆனால் கடைசி பந்தை சந்திப் சர்மா விக்கெட் எடுத்ததை அடுத்து ராஜஸ்தான அணியினர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த பந்து நோபால் என அம்பயர் அறிவித்ததை எடுத்து கடைசி பந்தில் நான்கு ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலை இருந்தது. அந்த பந்தில் அப்துல் சமது சிக்சர் அடித்ததால் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
இந்த பரிதாபகரமான தோல்வியால் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் துவண்டு போயினர். போட்டிக்குப் பின்பு பேசிய சஞ்சு சாம்சன் “நான் சந்தீப் ஷர்மாவை முழுமையாக நம்பினேன். அவர்தான் சிஎஸ்கே போட்டியை அபாரமாக வென்று கொடுத்தார். ஐபிஎல் விளையாடுவது எளிதானது இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடவேண்டும். நீங்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் வரை வெற்றி உங்களுடையது அல்ல” என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.