ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

இன்னும் அத மறக்கல போல… லக்னோவுக்கு எதிரான போட்டியில் குஜராத் அணிக்கு சப்போர்ட் செய்த கோலி

லக்னோ மற்றும் ஆர் சி பி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு கம்பீர் மற்றும் கோலி இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் வீரர் கைல் மேயர்ஸ், கோலியிடம் போட்டி முடிந்த பின்னர் பேசிக் கொண்டிருந்த போது, அவரை அங்கிருந்து கையைப் பிடித்து அழைத்துச் சென்றார் கம்பீர். இதனால் கோபமான கோலி ஏதோ சொல்ல, உடனடியாக கம்பீரும் வார்த்தைகளை விட, இருவரும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டனர்.  பின்னர் கே எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கி பிரித்து அழைத்துச் சென்றனர். இதைப் பலரும் பல விதமாக கண்டித்து விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் நேற்று லக்னோ அணிக்கெதிராக குஜராத் அணி விளையாடிய போட்டியில், குஜராத் அணி வீரர்களான சஹாவின் பேட்டிங் மற்றும் ரஷீத் கான் பிடித்த அபாரமான கேட்ச் ஒன்றையும் பாராட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஸ்டேட்டஸாக வைத்திருந்தார். வழக்கமாக இப்படி வெளிப்படையாக கோலி, ஒரு அணிக்கு ஆதரவு தெரிவிப்பவர் இல்லை. ஆனால் லக்னோ அணிக்கு எதிரான மோதலால், கோலி இப்படி செய்துள்ளார் என ரசிகர்கள் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர்.