செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (15:31 IST)

டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு! – சாதிக்குமா பஞ்சாப் அணி?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் முதல் ஆட்டத்தில் மோத உள்ளன.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய பிற்பகல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதிக் கொள்கின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இரண்டு அணிகளும் 5 போட்டிகளில் 3 போட்டிகள் வென்றுள்ள நிலையில் இன்றைய போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.