1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL fix penalty to KL Rahul

சதம் அடித்த லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுலுக்கு அபராதம்!

KL Rahul
நேற்றைய போட்டியில் மும்பைக்கு எதிராக விளையாடிய லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியின் பிற்பகல் ஆட்டத்தில் லக்னோ அணியும், மும்பை அணியும் மோதிக் கொண்டன.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை குவித்தது. அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 60 பந்துகளில் 103 ரன்கள் விளாசினார். பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்களே பெற்று தோல்வியடைந்தது.

இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக கே.எல்.ராகுல் அறிவிக்கப்பட்டார். ஆனால் நேற்றைய போட்டியில் மும்பை அணிக்கு எதிராக பந்து வீச நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதற்காக கே.எல்.ராகுலுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தோத்துட்டோம்தான்.. ஆனா சும்மா இருக்க மாட்டோம்! – ரோகித் சர்மா உறுதி!