ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (09:23 IST)

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்துமா சிஎஸ்கே! – ஆர்வத்தில் இன்றைய போட்டி!

IPL
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் இரண்டாவது ஆட்டத்தில் சிஎஸ்கே – குஜராத் அணிகள் மோத உள்ளன.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்த சீசனில் ஐபிஎல்லின் பெரிய அணிகளான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.

ஆனால் புதிதாக அறிமுகமான லக்னோ மற்றும் குஜராத் அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன. நடைபெற்ற 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்ற குஜராத் அணி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல 5 போட்டிகளில் 1 போட்டி மட்டுமே வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டி பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த போட்டி மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.