1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. condom and dating app ads should be banned

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

cricket
உலகம் முழுவதும் உள்ள மக்களில் பலருக்கும் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் பழக்கம் இருக்கிறது. இந்திய கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை கவாஸ்கர், கபில்தேவ் காலத்தில் இருந்தே பலரும் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்து வருகிறார்கள். கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி, 20 - 20 போட்டி ஆகியவை நடத்தப்படுகின்றன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பினரும் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசிக்கிறார்கள். தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் போது இடையிடையே பல விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகிறது.  இந்நிலையில்தான், கிரிக்கெட் போட்டிகளின் நேரலை ஒளிபரப்பின்போது ஆணுறை மற்றும் டேட்டிங் செயலி தொடர்பான விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு ஐசிசி தலைவர் ஜெய்ஷாவுக்கு  கடிதம் எழுதியிருக்கிறது.

குழந்தைகளுடன் அனைவரும் குடும்பமாக அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதால் அத்தகைய விளம்பரங்கள் உகந்தது அல்ல என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.