தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி புதிய சாதனை: பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களில் அசைக்க முடியாத சாதனை.!
- முகேஷ் அம்பானியை முந்தினார் கௌதம் அதானி: ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தராக புதிய சாதனை!
- இந்திய அரசாங்கத்தில் 8931 நாள் பதவி வகித்த மோடி.. புதிய சாதனை..!
- 700 பில்லியன் டாலர் சொத்து: உலக வரலாற்றில் புதிய சாதனை படைத்த எலான் மஸ்க்
- திரையுலகில் புதிய சாதனை!.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறப்போகும் ஜனநாயகன்!..
அதிக சேம் சைடு கோல்கள்.. 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மோசமான சாதனை..!
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடர், ஒரு புதிய விசித்திரமான மற்றும் சோகமான சாதனைக்கு வழிவகுத்துள்ளது. இத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் காரணமாக 'ஆப் சைடு' கோல்கள் அதிகம் பதிவாகி வரும் வேளையில், எதிரணிக்கு சாதகமாக தங்களது சொந்த கோல் போஸ்ட்டிலேயே பந்தை அடிக்கும் 'சேம் சைடு' கோல்களும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளன.
நடப்புத் தொடரில் இதுவரை மொத்தம் 13 முறை 'சேம் சைடு' கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 12 முறை சொந்த கோல் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. கேப் வெர்டே அணிக்கு எதிரான 'ரவுண்டு-32' ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதற்கு இந்த 'சேம் சைடு' கோல் தான் முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த தொடரில் எகிப்து நாட்டின் வீரர் முகமது ஹானி ஒரே உலக கோப்பை தொடரில் இரண்டு முறை 'சேம் சைடு' கோல் அடித்த முதல் வீரர் என்ற வேதனையான சாதனையை படைத்துள்ளார்.
லீக் சுற்றில் பெல்ஜியத்திற்கு எதிராகவும், பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 55-வது நிமிடத்திலும் அவர் செய்த தவறுகளால் போட்டிகள் சமனில் முடிந்தன. இறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறையிலேயே எகிப்து அணி வெற்றி பெற முடிந்தது.
Edited by Siva
