ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 16 ஜூன் 2023 (07:48 IST)

மீண்டும் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு?... வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நடக்கும் மாற்றம்!

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடிக்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால் அவருக்கு போட்டியாக ரிஷப் பண்ட், இஷான் கிஷான் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தும் சஞ்சு, இப்போதுதான் சில போட்டிகளில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இந்நிலையில் இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீஸுக்கு சென்று அங்கு மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட உள்ள நிலையில் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் சஞ்சு சாம்சனுக்கு இடமளிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில்  விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்படுவதாக தெரிகிறது.