திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 16 ஜூன் 2023 (07:29 IST)

மீண்டும் களத்தில் இறங்கும் ராயுடு & பிராவோ… சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாட்டம்!

அமெரிக்காவில் மேஜர் கிரிக்கெட் லீக் என்ற தொடர் விரைவில் இந்த ஆண்டு முதல் தொடங்க உள்ளது. இதில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் அந்த லீக்கிலும் அணிகளை வாங்கியுள்ளனர்.

சிஎஸ்கே அணியின் உரிமையாளர்கள் டெல்லாஸ் அணியை வாங்கி டெல்லாஸ் சிஎஸ்கே என்ற பெயரை சூட்டியுள்ளனர். இதில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய டெவான் கான்வே, மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

மேலும் சிஎஸ்கே அணிக்காக விளையாடி ஓய்வை அறிவித்த அம்பாத்தி ராயுடு மற்றும் டுவெய்ன் பிராவோ ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ராயுடு 2023 ஐபிஎல் சீசனோடு ஓய்வு பெற்ற நிலையில் இப்போது வெளிநாட்டு தொடரில் விளையாடுவதில் அவருக்கு எந்த சிக்கலும் இல்லை. அதுபோல பிராவோ டெல்லாஸ் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராகவும் கூடுதல் பொறுப்பையும் ஏற்கிறார்.