1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Jio cinema will stream india vs west indies series for free

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடரை இலவசமாக பார்க்கலாம்… எந்த ஓடிடியில் தெரியுமா?

இந்தியா
இந்திய அணிக்கு அடுத்தடுத்த கிரிக்கெட் போட்டிகளுக்கு பிறகு இப்போது ஒரு நீண்ட ஓய்வு கிடைத்துள்ளது. இனிமேல் ஜூலை மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம்தான் இந்தியாவின் அடுத்த சீரிஸ். வெஸ்ட் இண்டீஸ் சென்று இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி 20 போட்டிகளை விளையாடுகிறது. இதற்கான அணித் தேர்வில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தொடருக்காக தயாராக இந்திய அணிக்கு இப்போது நீண்ட ஓய்வு கிடைத்துள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டியை ஜியோ சினிமா ஓடிடியில் இலவசமாக பார்க்கலாம். ஏற்கனவே ஜியோ சினிமா ஐபிஎல் தொடரை இலவசமாக ஸ்ட்ரீம் செய்ததால் அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடியது  குறிப்பிடத்தகக்து. 
அடுத்த கட்டுரையில்
நியுசிலாந்து அணிக்கு அடுத்த அடி… உலகக்கோப்பை தொடரில் இருந்து வில்கும் மற்றொரு வீரர்!