1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 15 ஜூன் 2023 (22:39 IST)

93 மணி நேரம் சமையல் செய்து ஒரு பெண்மணி சாதனை

Nigerian
நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஹில்டா பாசி 100 மணி நேரம் சமையல் செய்து சாதனை படைத்துள்ளார்.

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஹிட்லா பாசி. இவருக்கு வயது 26. இவர் கடந்த மே மாதம் 11 ஆம் தேதி சமையல் பயணம் தொடங்கி மே 15 ஆம் தேதி வரை தொடர்ந்துள்ளது.

சமையலறை ஒன்றில் 100 பானைகளுக்கு மேல் உணவை சமைத்த இவர் தன்  ஓய்வு இடைவேளைகளில் கூடுதலாக நிமிடங்களை எடுத்துக் கொண்டார்.

இதனால், இவர் சமையலுக்கு எடுத்துக் கொண்ட 100 மணி நேரத்தில் 7 மணி நேரம் கழிக்கப்பட்டு, 93 மணி நேரம் 11 நிமிடங்கள் இவர் சமைத்ததாக அறிவிக்கப்பட்து.

இவரது சாதனைக்கு பலரும் பாராட்டுகள் கூறி வருகின்றனர்.  இதற்கு முன்னதாக  இந்திய சமையல் கலைஞர் லதா டோண்டர் 87 மணி நேரம் சமையல் செய்திருந்த நிலையில், தற்போது ஹிட்லா பாசி இதை முறியடித்துள்ளார்.

மேலும், இந்த சாதனை முயற்சி என்பது நைஜீரியா நாட்டு உணவு வகைகளை பிரபலப்படுத்தும் நோக்கில் செய்ததாகத் தெரிவித்தார்.