திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 16 ஜூன் 2023 (07:30 IST)

இந்திய அணிக்குள் ஆணவம் ஊருடுவியுள்ளது… வெளுத்து வாங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பரிதாபகரமாக தோற்றது. அதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள்.

இதுபற்றி பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீர்ர் ஆண்டி ராபர்ட்ஸ் இந்திய அணி ஆணவம் பிடித்து மற்ற அணிகளை குறைத்து மதிப்பிடுவதாக வெளுத்து வாங்கியுள்ளார். இந்திய அணி குறித்து மேலும் பேசியுள்ள அவர் “இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டா அல்லது ஐபிஎல் போன்ற லீக் கிரிக்கெட்டா? எது முக்கியம் என்பதை தீர்மாணிக்க வேண்டும்.

இந்த போட்டியில் இந்திய அணியின் சில பேட்ஸ்மேன்களாவது தங்கள் பேட்டிங் பலத்தைக் காட்டுவார்கள் என எதிர்பார்த்தேன். அஜிங்க்யா ரஹானே தவிர யாரும் ஜொலிக்கவில்லை.  இந்திய வீரர்கள் இந்தியாவுக்கு வெளியே சிறப்பாக விளையாடுவதில்லை. அஸ்வினை அணியில் எடுக்காதது என்னால் இன்னமும் நம்ப முடியாத ஒன்றாக உள்ளது.” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.