திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 2 நவம்பர் 2024 (08:06 IST)

தோனி, கோலி இல்ல… ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கிய வீரர் இவர்தான்!

ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அவற்றில் சில அணிகளின் முடிவுகள் எதிர்பார்ப்பிற்கு மாறானவையாக இருந்தன. மும்பை அணியை விட்டு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா, அந்த அணியிலேயே தக்கவைக்கப்பட்டார். தோனி சென்னை அணிக்காக அன்கேப்ட் ப்ளேயராக எடுக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட கேப்டன்கள் அணிகளால் கைவிடப்பட்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸுக்காக ஆட ஒத்துக் கொண்ட ரோஹித் ஷர்மா தன்னுடைய சம்பளத்தையும் மற்ற வீரர்களை விட குறைவாக பெற ஒத்துக் கொண்டுள்ளார். அதற்குக் காரணமாக அவர் ஏற்கனவே சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதை அவர் கூறியுள்ளார்.

ஆனாலும் ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் பெற்ற வீரர்களின் பட்டியலில் அவர்தான் முதலிடத்தில் உள்ளார். இதுவரை ரோஹித் ஷர்மா 210.9 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில் கோலி 209.2 கோடி ரூபாயுடனும், தோனி 192.8 கோடியுடனும் உள்ளனர்.