திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2024 (08:32 IST)

ரோஹித் முதல் தோனி வரை… பல எதிர்பாராத திருப்பங்கள்… ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்களின் பட்டியல்!

ஐபிஎல் அடுத்த சீசனுக்கு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைத் தக்கவைக்கலாம் என்ற புதிய விதிகளை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம். அதில் அதிகபட்சமாக 5 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களாக இருக்கலாம். அதே போல அன்கேப்ட் வீரர்களாக அதிகபட்சம் 2 பேர் இருக்கலாம்.

இதையடுத்து நேற்று அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அவற்றில் சில அணிகளின் முடிவுகள் எதிர்பார்ப்பிற்கு மாறானவையாக இருந்தன. மும்பை அணியை விட்டு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா, அந்த அணியிலேயே தக்கவைக்கப்பட்டார். தோனி சென்னை அணிக்காக அன்கேப்ட் ப்ளேயராக எடுக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட கேப்டன்கள் அணிகளால் கைவிடப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அணியும் தக்கவைத்த வீரர்களின் பட்டியல்

சென்னை :ருத்துராஜ், மகேஷ் பதீரனா, ஷிவம் துபே, ரவீந்தர ஜடேஜா, தோனி
மும்பை இந்தியன்ஸ் : ஜஸ்ப்ரித் பும்ரா, ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா
டெல்லி கேப்பிடல்ஸ் :அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ட்ரிஸ்டியன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல்
குஜராத் டைட்டன்ஸ்: ரஷீத் கான், ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ராகுல் தெவாட்டியா, ஷாருக் கான்
கே கே ஆர் : ரின்கு சிங், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங்
லக்னோ: நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மோசின் கான், ஆயுஷ் பதோனி
பஞ்சாப் : ஷஷாங்க், ப்ரப்ஷிம்ரான் சிங்
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரெல், ஷிம்ரான் ஹெட்மெய்ர்,சந்தீப் ஷர்மா
பெங்களூர்: விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள்.
சன் ரைசர்ஸ்: பாட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, நிதீஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசன், ட்ராவிஸ் ஹெட்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IPL (@iplt20)