இலங்கை அணி வெற்றிக்கு பேட்ஸ்மேன்களே காரணம்: ரோகித் சர்மா

rohit
Last Updated: புதன், 7 மார்ச் 2018 (12:32 IST)
இலங்கை அணி வெற்றிக்கு அந்த அணியின் பேட்ஸ்மேன்களே காரணம் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்
 
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி இலங்கையில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசியதாவது,  இலங்கை அணி வெற்றிக்கு அந்த அணியின் பேட்ஸ்மேன்களே காரணம். இந்த போட்டியின் தோல்வி மூலம் இந்திய அணி வீரர்க்ள் பாடம் கற்றுக் கொள்வார்கள். மேலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் தொடரின் அடுத்த போட்டி இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே வரும் 8ஆம் தேதி நடைப்பெறுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :