வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 6 மார்ச் 2018 (22:24 IST)

இலங்கைக்கு எதிரான டி20 போட்டி: இந்தியா தோல்வி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று கண்டியில் நடைபெற்ற டி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் குவித்தது. தவான் 90 ரன்களும், பாண்டே 37 ரன்களும் அடித்தனர்

இந்த நிலையில் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி  18.3 ஓவர்களில் 175  ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. பெராரே 66 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி தற்போது முன்னணியில் உள்ளது.

இந்த தொடரின் அடுத்த போட்டி இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே வரும் 8ஆம் தேதி நடைபெறும்.