2 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்த இந்தியா

Last Modified செவ்வாய், 6 மார்ச் 2018 (19:13 IST)
இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. முதல் போட்டி இன்று கண்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி முதல் இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்துவிட்டது. முதல் ஓவரில் கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், இரண்டாவது ஓவரில் சுரேஷ் ரெய்னா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்தியா சற்றுமுன் வரை 2.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 10 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை அணியின் சமீரா மற்றும் ஃபெர்னாடோ தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :