தவான் அதிரடியில் இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு

Dhawan
Last Updated: செவ்வாய், 6 மார்ச் 2018 (20:44 IST)
முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்துள்ளது.

 
இலங்கை, இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் விளையாடும் முத்தரப்பு டி20 தொடர் இன்று தொடங்கியது. இந்தியா - இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் முதல் டி20 போட்டி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.
 
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பத்திலே ரோகித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா வந்த வேகத்தில் வெளியேறினார். தவான் மற்றும் மனிஷ் பாண்டே அதிரடியில் களமிறங்கினர்.
 
தவான் 90 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மனிஷ் பாண்டே 37 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :