அதிரடியில் களமிறங்கிய தவான் - மனிஷ் பாண்டே கூட்டணி

India
Last Updated: செவ்வாய், 6 மார்ச் 2018 (20:12 IST)
இலங்கை - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியில் தவான் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் அதிரடியில் களமிறங்கினர்.

 
இலங்கை, இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் விளையாடும் முத்தரப்பு டி20 தொடர் இன்று தொடங்கியது. இந்தியா - இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் முதல் டி20 போட்டி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.
 
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பத்திலே ரோகித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா வந்த வேகத்தில் வெளியேறினார். தவான் மற்றும் மனிஷ் பாண்டே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் ஒருகட்டத்தில் அதிரடியில் களமிறங்கினர்.
 
தவான் 30 பந்துகளில் அரைசதம் விளாசி தற்போது 57 ரன்களுடன் களத்தில் உள்ளார். மனிஷ் பாண்டே அணியில் நிலையை உணர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :