1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rishab pant may not ready for next season IPL

அடுத்த ஆண்டு கூட ரிஷப் பண்ட் கிரிக்கெட் விளையாடமாட்டார்… இந்திய அணி வீரர் அதிர்ச்சி கருத்து!

ரிஷப் பண்ட்
இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இப்போது அவர் ஓய்வெடுத்து வரும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு திட்டமிடப்பட்டு இருந்த இன்னொரு அறுவை சிகிச்சை அவருக்கு தேவையில்லை என மருத்துவர் குழு கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் அவர் எதிர்பார்த்ததை விட சீக்கிரமே இந்திய அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது அதிர்ச்சிகரமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் இந்திய அணி வீரர் இஷாந்த் சர்மா. இதுபற்றி அவர் பேசுகையில் “குணமடைந்து வரும் ரிஷப் பண்ட், அடுத்த ஐபிஎல் சீசனில் கூட விளையாடுவாரா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயம் சாதாரணமானது அல்ல. அவர் இப்போதுதான் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சிகளை தொடங்கியுள்ளார்.  கார் விபத்துக்குப் பிறகு அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்வது எளிதானது இல்லை” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
4வது டெஸ்ட் டிரா.. ஆஷஸ் தொடரை தக்க வைத்தது ஆஸ்திரேலியா..!