வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2023 (07:58 IST)

நீயே ஒளி… நீயே வழி… வொர்க் அவுட் மோடில் ரிஷப் பண்ட்.. வைரல் வீடியோ!

இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இப்போது அவர் ஓய்வெடுத்து வரும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு திட்டமிடப்பட்டு இருந்த இன்னொரு அறுவை சிகிச்சை அவருக்கு தேவையில்லை என மருத்துவர் குழு கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தன்னுடைய உடல்நிலை முன்னேற்றத்தைப் பற்றி அவ்வப்போது வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் இப்போது அவர் கடினமான வொர்க் அவுட் செய்யும் வீடியோவை இணையத்தில் வெளியிட, அது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.