திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2023 (16:09 IST)

எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் எங்கே தெரியுமா? சென்னையில் எப்போது?

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பாட்னா மற்றும் பெங்களூரில் நடந்த நிலையில் அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பாஜகவை எதிர்த்து இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா என்று பெயர் இடப்பட்டுள்ளது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில்  எதிர்க்கட்சிகளின் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் கர்நாடக மாநில பெங்களூரிலும் நடந்த நிலையில் மூன்றாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. 
 
நான்காம் பட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran