செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 19 ஜூலை 2023 (08:08 IST)

“நான் இன்னும் கர்ப்பமாகவில்லை.. அதனால் திருமணம் இப்போது இல்லை” – ரசிகரின் கேள்விக்கு டாப்ஸி பதில்!

பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை டாப்ஸி “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த சபாஷ் மிது திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

டாப்ஸி சமீபத்தில் பத்திரிக்கையாளர்களோடு மோதல் என சில சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களின் கேள்விக்கு சமூகவலைதளத்தில் பதிலளித்தார்.

அப்போது ஒரு ரசிகர் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் எனக் கேட்க அதற்கு டாப்ஸி “நான் இன்னும் கர்ப்பமாகவில்லை. அதனால் இப்போது எனக்கு திருமணம் இல்லை” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த பதில் சர்ச்சைகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது.