தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் – எப்படி தெரியுமா?
வெஸ்ட் இண்டீஸுடன் நடைபெற்ற சுற்றுதொடர் ஆட்டத்தின் 3வது சுற்றில் அபாரமாக விளையாடிய ரிஷப் பண்ட் தோனியின் சாதனையை முறியடித்தார்.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸுக்கான சுற்றுத்தொடர் ஆட்டம் அமெரிக்காவில் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெஸ்ட் இண்டீஸை வெற்றிபெற விடாமல் மொத்த ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது இந்திய அணி.
இதன் மூன்றாவது ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ரிஷப் பண்ட் 42 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். இதன்மூலம் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 56 ரன்கள் தோனி அடித்ததே விக்கெட் கீப்பரால் பெறப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். அந்த சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.