திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (11:59 IST)

கோஹ்லியை நீக்க நினைப்பது முட்டாள்தனமானது – ஷோயப் அக்தர் கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோஹ்லியை நீக்க நினைப்பது முட்டாள்தனமான முடிவு என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த உலக கோப்பையில் இந்தியாவின் மோசமான ஆட்டத்திற்கு காரணம் கேப்டன் விராட் கோஹ்லிதான் என பலரும் விமர்சித்து வந்தார்கள். இதற்கிடையே கோஹ்லிக்கும், ரோஹித் ஷர்மாவுக்கும் இடையே மோதல் வலுத்து வருவதாகவும் வதந்திகள் பரவின.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் “விராட் கோஹ்லி சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, நல்ல கேப்டனும் கூட. விராட் கோஹ்லி கேப்டனாக தொடருவதுதான் இந்திய அணியின் எதிர்காலத்துக்கு நல்லது. அவருக்கு தேவை சரியான தேர்வாளர்களும் பயிற்சியாளர்களும்தான்.

விராட் கோஹ்லியை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவது முட்டாள்தனமானது. ரோஹித் ஷர்மா கேப்டன் ஆக நினைப்பதை கோஹ்லி தடுக்கிறார் என்று வலம் வரும் செய்திகள் வதந்தியாகதான் இருக்க முடியும்” என்று கூறியுள்ளார்.